புதுடெல்லி காவல்துறை மாநிலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து சட்டங்களை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான ஐடியாக்களை பின்பற்றுவது வழக்கம். 


அந்தவகையில், பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் பயணம் செய்யும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு ஒரு வீடியோ மூலம் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தமுறை புதுடெல்லி காவல்துறையினர் ’Kabhi Khushi Kabhie Gham' என்ற இந்தி திரைப்படத்தில் வரும் காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர்.


மக்கள் போக்குவரத்து சிக்னலின்போது சிவப்பு நிற விளக்கு எரிந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பலரும் அப்படியே சென்றுவிடுகின்றனர். போக்குவரத்து விதிகள் தெரிந்திருந்தும் அதை பின்பற்ற யாரும் முன்வருவதில்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சாலையில் வாகனங்களை இயக்கி செல்கின்றனர். இதுவே உயிர் பறிபோகும் ஆபத்திற்கும் காரணமாக ஆகிறது.






இதை தடுப்பதற்கு டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு லைட் எரியும் போது, கார் ஒன்று சிக்னலை கவனிக்காமல், வேகமாக கடந்து செல்கிறது. அந்தக் கார் சென்ற பிறகு, கபி குஷி கபி கம் (Kabhi Khushi Kabhie Gham) திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் (Kareena Kapoor) பேசிய வசனம் ஒன்று ஒலிப்பரப்பாகிறது. அதுவும், சிக்னல் லைட்டில் கரீனா கபூர் பேசுவது போல அமைந்திருக்கிறது. 


 'கபி குஷி கபி கம்' படத்தில் கரீனா கபூர் பேசும்  வசனமான ‘"Yeh kon hai jisne Poo ko dobara mud kar nahi dekha." இந்தப் படத்தில் கரீனா கபூர் பூ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த வீடியோவில், கரீனா கபூர், சிகன்லை கவனிக்காமல் செல்பவர்களிடம் ‘என்னை கவனித்துவிட்டு செல்லுங்கள்.’ என்று சொல்வது போல அமைந்திருக்கும்.






இது மட்டுமன்றி, சைபர் கிரைம்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற பலவற்றிற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த டெல்லி போலீசார் வேடிக்கையான மற்றும் வைரல் வீடியோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண