India Corona Spike : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4வது நாளாக குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம்
இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன் 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு 12,591 உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. நேற்றைய தினம் 7,171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் கிடு கிடுவென குறைந்து 5,874 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட 18 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,105-ஆக குறைந்துள்ளது.
25 பேர் உயிரிழப்பு
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,49,45,389 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,508 ல் இருந்து 5,31,533 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,314 லிருந்து 49,105-ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 24 நேரத்தில் 1.43 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.66 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில வாரி பாதிப்பு:
தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 11,123 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 4,079 பேர், தலைநகர் டெல்லியில் 3,440 பேர், உத்திர பிரதேசத்தில் – 2,981 பேர், தமிழ்நாடு – 2,928 பேர், ஹரியானாவில் – 3,965 பேர், குஜராத்தில் – 1,301 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 49,015 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,94,134 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் 1 பேர், உத்தர காண்டில் 4 பேர், ராஜஸ்தானில் 2 பேர், தமிழ்நாட்டில் 2 பேர் என மொத்தம் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க