Breaking News LIVE: மே 14-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம்
Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
1-9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகாரில், வரும் மே 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக அமலாக்காத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று இருக்கிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் சீனாவின் ஹாங்ஷு நகரில் செப்டம்பரில் நடக்கவிருந்த 19 வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கைதி விக்னேஷ் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடாததை கண்டித்து அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
சென்னை விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக போலீசார் 9 பேர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சுனிலிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
செங்கல்பட்டு : சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 25 மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 9 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 3, 545 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 3,459 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது.
சென்னை போர்டு தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்துப் பேசாமல், ஊழியர்களின் செட்டில்மென்ட் குறித்துப் பேசுவதால் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்த களக்காடு பகுதியில் உள்ள திருக்குறுங்குடி நம்பி கோயிலில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பக்தர்கள் செல்ல மேலும் 2 வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு 3, 936 மையங்களில் இன்று தொடங்குகிறது.
இன்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் - மும்பை அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன
உலகில் இதுவரை 51.57 கோடி பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, அதில் 62. 71 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 47.05 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
Background
சென்னையில் இன்று 30 வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110. 85க்கும், டீசல் 100. 94 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -