சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி ஆகிய 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள், மொத்தம் 10 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி.
சென்னை உள்நாட்டு விமான நிலையம்
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானம், காலை 7.45 மணிக்கு புவனேஸ்வர் செல்லும் விமானம், காலை 9.35 மணிக்கு பெங்களூர் செல்லும் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விமானம், பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் விமானம், ஆகிய 5 புறப்பாடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
5 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
அதைப்போல் சென்னைக்கு பெங்களூரில் இருந்து இன்று காலை 9 மணிக்கு வரும் விமானம், காலை 10.50 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வரும் விமானம், பகல் 12 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து வரும் விமானம், பகல் ஒரு மணிக்கு கொல்கத்தாவில் இருந்து வரும் விமானம், மாலை 6.15 மணிக்கு சிலி குறியிலிருந்து வரும் விமானம், ஆகிய 5 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வருகை விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
10 விமானங்கள் ரத்து
இந்த 10 விமானங்களும் நிர்வாகக் காரணங்களால், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் முறையான முன்னறிவிப்புகள் இல்லாமல், ஒரே நாளில் 10 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கவுண்டர்களில் பயணிகள், இது பற்றி கேட்டாலும், முறையான பதில் எதுவும் அளிக்காமல், பயணிகள் அலக்கழிக்கப்படுவதாக, பயணிகள் தரப்பில் குறை கூறுகின்றனர்.