ஹொலேநரசிப்பூர் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உயிரிழந்த பெண் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தட்டேகெரே கிராமத்தைச் சேர்ந்த சைத்ரா என்றும், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா தாலுகாவைச் சேர்ந்த சிவகுமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் (நேற்று) சனிக்கிழமையன்று சைத்ரா (28) மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமார் (32) ஆகியோர் விவகாரத்திற்காக வந்திருந்தனர். 


சிவகுமாருக்கும், சைத்ராவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவரது தொல்லை தாங்க முடியாமல், கடைசியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய சைத்ரா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மீது ஜீவனாம்சம் வழக்கும் தொடர்ந்தார்.


இந்த நிலையில், நேற்று இந்த தம்பதியினரை சமதானம் செய்வதற்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டனர். நீதிபதி மற்றும் வழக்கறிஞரின் ஆலோசனையின்படி தனது இரண்டு குழந்தைகளுக்காக மனைவியுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து சிவக்குமார் வாழ்வதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தார். தொடர்ந்து சமாதனத்திற்கு ஒப்புக்கொண்ட சிவக்குமார் தனது மனைவியை கழிவறைக்கு அழைத்துச் சென்று கூர்மையான கத்தியை கொண்டு கழுத்தை அறுத்துள்ளார். பின்னர், சைத்ரா அழைத்து வந்த குழந்தையையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், அங்கிருந்த சிலர் அவரை தடுத்து நிறுத்தி குழந்தையை மீட்டனர்.


பின்னர், தனது மனைவி சைத்ராவை கொலை செய்த சிவக்குமார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் தப்பி சென்ற சிவக்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற காவல்துறை அதிகாரிகள், சைத்ராவை உடனடியாக தாலுகா மருத்துவமனைக்கும், பின்னர் ஹாசனில் உள்ள எச்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சைத்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 




இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஆர் ஸ்ரீனிவாஸ் கவுடா தெரிவிக்கையில், “ நீதிமன்றத்தில் ஒருவருக்கு நடந்த ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, கழிவறைக்குச் சென்ற சைத்ராவை சிவக்குமார் பின் தொடர்ந்தார். அங்கு அவரது கணவர் சிவக்குமார் கத்தியால் சைத்ராவின் கழுத்தை அறுத்தார். சைத்ராவை மீட்ட எங்கள் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, டாக்டர்கள். அவள் இறந்துவிட்டாள் என்றும், அவளுடைய தமனிகள் இரண்டும் அறுக்கப்பட்டு தொண்டை வெட்டப்பட்டு இறந்தார். 


மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் சிவக்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர் எப்படி நீதிமன்றத்துக்குள் கத்தியை கொண்டு வந்தார், எப்படி திட்டமிட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்துவோம்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண