டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவிய கட்டிடத்தில் இருந்து 7 பேரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆனால், மூச்சுத்திணறல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.


வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து:


டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள சி.ஆர். கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 21 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அவை ஈடுபட்டு வருகின்றன.


 






தலைநகரில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு டெல்லியில் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஷாபூர் ஜாட் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு காலை 5.16 மணிக்கு அழைப்பு வந்தது. இதுகுறித்து டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அழைப்பை தொடர்ந்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது" என்றார்.


சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) இந்தச் சம்பவம் நடந்தது.


இதையும் படிக்க: Rahul Gandhi: ஸ்மார்ட் பாயாக மாறிய ராகுல் காந்தி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!