உத்தர பிரதேச மாநிலம் கன்னௌஜில் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் காலணி வீசப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


உண்மை என்ன?


அந்த வீடியோவின் கேப்ஷன் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பின்வருமாறு, "கன்னோஜ் நகரில் அகிலேஷ் யாதவ் செருப்பு மற்றும் காலணிகளுடன் வரவேற்கப்பட்டார்".




இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்தோம். அப்போது, இந்த தகவல் தவறானது என தெரிய வந்தது. முதலில், கூகுளில் முக்கிய Keyword-களை போட்டி தேடினோம். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. வீடியோவை உற்று கவனித்ததில், @vikashyadavauraiyawale என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வாட்டர் மார்க்காக இருந்தது. 


இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்ததில், மே 2, 2024 அன்று வெளியிடப்பட்ட அதே வீடியோவின் தெளிவான பதிப்பைக் கண்டறிந்தோம். அந்த வீடியோவை பிரேம் பை பிரேமாக பார்த்ததில், அகிலேஷ் யாதவை நோக்கி காலணிகள் மற்றும் செருப்புகள் வீசப்படவில்லை.




அதற்கு மாறாக, பூக்கள் மற்றும் மாலைகள் வீசப்பட்டன என்பது தெளிவாகியது. வீடியோவில் செருப்புகளோ காலணிகளோ தெரியவில்லை. இதன்  மூலம், அகேலேஷ் யாதவ் மீது காலணிகளோ செருப்புகளோ வீசப்படவில்லை என்பது தெரிய வந்தது. தவறான கூற்றுகளுடன் வீடியோ பகிரப்பட்டது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Boom என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.