அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அமெரிக்க விமான சேவையை சீன நிறுத்திய நிலையில், அமெரிக்காவின் செயல் பழிக்கு பழியாக பார்க்கப்படுகிறது.
Xiamen, Air China, China Southern Airlines மற்றும் China Eastern Airlines ஆகிய 26 விமானங்களின் சேவையை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 28 வரை கொரோனா காரணமாக அமெரிக்க தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 19 விமானங்களின் சேவையும் நியூயார்க்கில் இருந்து 7 சீனா கிழக்கு விமானங்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை சீன அலுவலர்கள் தங்கள் கொள்கைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை சீனாவிற்கு செல்லும் விமானத்தில் உள்ள மொத்த பயணிகளின் எண்ணிக்கையில் 4% ஐ எட்டினால், ஒரு விமானம் நிறுத்தப்படும் என்றும் 8 சதவிகிதமாக உயர்ந்தால் இரண்டு விமானங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க அரசாங்கம் பலமுறை ஆட்சேபணம் தெரிவித்தது. அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சோதனையில் தெரிய வந்தாலும் சீனாவில் இறங்கிய பிறகு சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் சம்பந்தம் இல்லாமல் விமான நிறுவனத்தின் மீது பழி சுமத்தப்படுவதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியிருந்தது.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சீனா மற்றும் அமெரிக்க விமான சேவை விவகாரத்தில் சண்டையிட்டு வருகின்றன. ஆகஸ்ட் 2021இல், நான்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து துறையும் அதே மாதிரியான கட்டுப்பாடுகளை நான்கு சீன விமான நிறுவனங்கள் மீது விதித்தது.
சமீபத்தில் விமான சேவை ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, மூன்று அமெரிக்க விமான நிறுவனங்கள் மற்றும் நான்கு சீன நிறுவனங்கள் இரு நாடுகளுக்கு இடையே வாரத்திற்கு சுமார் 20 விமானங்களை இயக்கி வந்தன.