இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10, 753 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் நேற்று புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10,753  நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அதிகபட்சமாக 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவான தொற்று நிலவரம் ஆகும். இந்தியாவில் மொத்தமாக 53,720 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு  4,42,23,211 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,091 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.69 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.19 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  



இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 18,663 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 5928, தலைநகர் டெல்லியில் 4311, தமிழ்நாடு – 2876, ஹரியானா – 3233, குஜராத் – 2220, ஹிமாச்சல் பிரதேசம் – 2144, உத்திர பிரதேசம் – 2579 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 53,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,58,625 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், பாலி கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் பல மாநிலங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Leaders Wishing ABPNadu: 3 ஆம் ஆண்டில் நடைபோடும் ABP நாடு.. குவிந்த அன்பான வாழ்த்துகள்.. பாராட்டுகளை பொழிந்த தலைவர்கள்!


ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்