கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து சேவையான ரயில்வே போக்குவரத்து சேவையும், அதன் வருவாயும் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்.டி.ஐ.யில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.


அவரது கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், 2020-21ம் நிதியாண்டில் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ப்ரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 119 கோடி கிடைத்துள்ளது. டைனாமிக் டிக்கெட் ரூபாய் 511 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.




கடந்த செப்டம்பர் வரையிலான 2021-22ம் ஆண்டிற்கான நிதியாண்டில், டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 240 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 353 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ப்ரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முந்தை வருவாயுடன் ஒப்பிடும்போது, ரயில்வே துறை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.


2019-20-ஆம் நிதியாண்டில் ரயில்வே சேவைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால், அப்போது, டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 1,313 கோடியும், தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 1,669 கோடியும், பிரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 603 கோடியும் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தது. கொரோனா காலத்தில் கிடைத்த வருவாயை இதனுடன் ஒப்பிடும்போது ரயில்வே துறை எந்தளவு இழப்பைச் சந்தித்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.




இது மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் புதிய ரயில் சேவைகளும் தொடங்கப்படவில்லை. 2016-2017ம் ஆண்டில் 223 ரயில்களின் சேவைகளும், 2017-2018ம் ஆண்டில் 170 ரயில்களின் சேவைகளும், 2018-2019ம் நிதியாண்டில் 266 ரயில் சேவைகளும், 2019-2020ம் நிதியாண்டில் 144 ரயில் சேவைகளும் நாட்டில் புதியதாக தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டித் தருவதில் ரயில்வே துறைகளின் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காரணமாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது


மேலும் படிக்க : Watch Video: 'மால டும் டும்'க்கு முன்பாக முத்தம் கேட்ட மணமகன்-வைரல் வீடியோ !


மேலும் படிக்க : எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை: 22 பேர் உயிரை பறித்த ஓட்டுநர்.. 190 ஆண்டுகள் சிறை தண்டனை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண