கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா


சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 46 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது. நுழைவுக்கட்டணத்துடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.


விமான சாகச சர்ச்சையும், அரசு விளக்கமும்


சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு. அரசின் கவனக்குறைவே காரணம் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணியில் உள்ள விசிகவும் கண்டனம். தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாக அரசு தரப்பில் விளக்கம்.


தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு


காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டத தொடர்ந்து, மாணவர்கள் மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர். முதல் நாளான இன்று மாணவர்களுக்கு 2ம் பருவ பாட நூல்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன


விமானத்தில் பயணித்தபோது மாரடைப்பு - பெண் உயிரிழப்பு


மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கலையரசி (58) மாரடைப்பு ஏற்பட்டு நடுவானிலேயே உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளை சந்தித்து விட்டு திரும்பியபோது இவரின் உயிர் பிரிந்துள்ளது. விமானம் நேற்றிரவு சென்னையில் தரை இறங்கியபோது அவர் இருக்கையை விட்டுநகராமல் இருந்ததால் பரிசோதத்தபோது இவர் இறந்தது தெரியவந்தது.


தங்கம் விலை சரிவு


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800க்கும், ஒரு கிராம் ரூ.7,100க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


ரூ.1,814 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்


மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை ஒன்றில் இருந்து போதை பொருட்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் என ரூ.1,814 கோடிமதிப்பிலான பொருட்களை குஜராத் மாநில பயங்கரவாத ஒழிப்பு படை முடக்கி உள்ளது. சோதனையில், திட மற்றும் திரவ வடிவிலான 907 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அமித் சதுர்வேதி மற்றும் சன்யால் பானே ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


நாயை கிண்டல் செய்த சிறுவன் மீது தாக்குதல்:


பஞ்சாப் மாநிலம் மொகாலிய்ல் தனது வளர்ப்பு நாயை கிண்டல் செய்ததாகக் கூறி 5 வயது சிறுவனை கடுமையாக தாக்கிய நபரால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். டியூஷன் முடித்து விட்டு வீடு திரும்பியபோது குரைத்த நாயை நோக்கி சிறுவன் குரல் எழுப்பியதால் ஆத்திரத்தில் உரிமையாளர் இவ்வாறு செய்ததாக தகவல்


காதலுக்கு எதிர்ப்பு - 13 பேரை கொன்ற பெண்


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. விசாரணையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால், உணவில் விஷம் கலந்தது தெரிய வந்துள்ளது.


பாகிஸ்தானில் வெடிவிபத்து - 2 பேர் பலி


பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் ஏலத்துக்காக நகரங்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரம்


ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை இந்தாண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இரு நாட்கள் நடத்த பிசிசிஐ திட்டம். லண்டன் நகரில் ஏலத்தை நடத்த திட்டமிட்டபோது, கடுமையான பனிப் பொழிவு இருக்கும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக தகவல். சவுதி அரேபியாவில் உள்ள நகரங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன.