மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்
பவள விழா கண்டுவிட்டோம்; நூற்றாண்டு காண்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று திமுக பவளவிழா நடந்து முடிந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று துணைமுதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார். அவரை தொடர்ந்து செந்தில்பாலாஜி, நாசர், கோவி செழியன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்து, அவர்களிடம் இடம் இருந்த 2 படகுகளைப் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அராஜகம். தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
தந்தையை காப்பாற்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற மகள்கள்
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் அருகே ஞான்சிங் என்பவரை, தோட்டத்தில் மறைந்து இருந்த சிறுத்தை தீடிரென தாக்கியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனை கண்ட அவரது 3 மகள்களும் சேர்ந்து, வெறுங்கைகளாலேயே சிறுத்தையை அடித்துக் கொன்றுள்ளனர்.
பயணத்தை முடித்துக்கொள்ளும் கொல்கத்தாவின் அடையாளம்
கொல்கத்தாவில் 150 ஆண்டுகளாக இயங்கி வரும் டிராம் சேவையை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. டிராம்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்னேஹாசிஸ் கூறியுள்ளார். நெரிசலுக்கு டிராம்களை மட்டும் குறை சொல்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என மக்கள் கருத்து.
நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்
நேபாளத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல். 3,000 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய குழுக்கள், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், 79 பேரை காணவில்லை என அரசு தரப்பில் தகவல். 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இஸ்ரேல் தாக்குதல் - ஹிஸ்புல்லா தலைவர் மரணம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவரது மரணம் போரின் இலக்குகளை அடைய அவசியமானது என நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!
ஐபிஎல் மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்யாத வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு, அடுத்த ஆண்டில் நடக்கும் மினி ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று, அணியால் ஏலம் எடுக்கப்பட்ட பிறகு போட்டிகளில் விளையாட முடியாது என கூறும் வீரர்கள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரிலும் ஏலத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்படுவர் எனவும் கட்டுப்பாடு
சென்னை அணியில் தோனி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன இந்திய வீரர்களை UNCAPPED PLAYER-ஆக அணியில் தக்க வைக்கலாம் என RETENTION விதிகளில் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விதியின் மூலம் சிஎஸ்கேவில் எம்.எஸ்.தோனி தக்க வைக்கப்பட்டு, மேலும் ஒரு சீசன் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் - மீண்டும் குறுக்கிட்ட மழை
கான்பூர்: இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டமும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விட்டுவிட்டு பெய்துவரும் மழையால் ஆடுகளம் ஈரமாக உள்ளதால் |அதனை சீராக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் 1 ம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்டது