ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் - முதலமைச்சர் ஸ்டாலின்
சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதன் மூலம் ஆரியத்தின் முன்னோடி திராவிடம் என உறுதிப்படுத்தப்பட்டது - முதலமைச்சர் ஸ்டாலின்
தவெக மாநாட்டு தேதியை அறிவித்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதில் கட்சியின் கொள்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி
பகுஜன் சமாஜ் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம்
என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் - ரஜினிகாந்த்
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவ் கொடுப்பதாக பரவும் செய்தி தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டட்து. அதற்கு, தன்னிடம் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என ரஜின் பதிலளித்தார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
சாத்தூர் அருகே குகன்பாறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலி. குருமூர்த்தி (20) என்ற தொழிலாளி படுகாயத்துடன் மீட்பு. உயிரிழந்தவர் குறித்து போலீசார் விசாரணை. வெடி விபத்தில் சிக்கிய மேலும் சிலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரம்
ஓடும் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
சென்னை - மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் என்ற பயணி, அவசர கால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு. இதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம். எமர்ஜென்சி அலாரம் அடிக்கத் தொடங்கியதும் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. தெரியாமல் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்திவிட்டதாக கூறிய அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
பிரதமர் மோடி நாளை அமெரிக்க பயணம்
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும், குவாட் மாநாடில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்க புறப்படுகிறார். அதிபர் பைடனை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்
பீகார்: ஆளுங்கட்சி மகளிரணி தலைவரை அடித்து, செருப்பு அணிவித்து ஊர்வலம்
சீதாமர்ஹி மாவட்டத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மகளிரணி தலைவராக உள்ள காமினி படேலை, அதே கட்சியை சேர்ந்த கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து அடித்து, செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்
இந்திய அணி ஆல்-அவுட்
வங்கதேச அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஷ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் சேர்த்தனர்.
அஷ்வின் புதிய சாதனை
சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது வரிசை அல்லது அதற்கு அடுத்த வரிசைகளில் களம் இறங்கி அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் (4 சதம்) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.