சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது பேசியவர்,  ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் சுமார் 11 ஆய்ரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க உள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


எடப்பாடி பழனிசாமி 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றபோது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை, அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானமாக இருக்கும்" என எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.


அன்னப்பூர்னா விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்


"GST குறித்த தொழில் முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை நிதியமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்படவேண்டிய ஒன்று. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு 


2,327 பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 2,763 மையங்களும் சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இஃப்தார் விருந்தில் மன்மோகன் சிங்குடன் தலைமை நீதிபதி பங்கேற்றது சரியா? பாஜக 


தலைமை நீதிபதி வீட்டில் நடைபெற்ற விநாய்கர் சதுர்த்தி பூஜையில், பிரதமர் மோடி பங்கேற்றது சர்ச்சையானது. இந்நிலையில்,  கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்றது சரியா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.


21ம் தேதி அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு


அமெரிக்க அதிபர் பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டன்னில் 21ம் தேதி குவாட் உச்சி மாநாட்டை கூட்டி உள்ளார். உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்,இந்திய பிரதமர் மோடி,ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்


சீனாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு


சீனாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அந்நாட்டு அரசு முடடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் வயது வந்தோரின் எண்ணிக்கை மற்றும் ஓய்வூதியத்திற்கான நிதிசுமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக உயர்த்தப்படுள்ளது.


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுத் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


2வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி. 194 ரன்கள் என்ற இலக்கை துரத்திய அந்த அணியில், அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 87 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. 


பிரபல 'பாடி பில்டர்' மாரடைப்பால் உயிரிழப்பு!


'உலகின் அசுரத்தனமாக உடல் அமைப்புள்ள பாடி பில்டர்' என அழைக்கப்படும் 154 கிலோ எடை கொண்ட பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த இலியா யெஃபிம்சிக், என்பவர் தனது 34 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார் இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒருநாளைக்கு 7 முறை சாப்பிட்டு வந்ததாகவும் 2.5 கிலோ இறைச்சி எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.