Ilayaraja Rajyasabha MP: ரஜினி.. பாரதிராஜா.. ராஜ்யசபா செல்லும் ராஜா சாருக்கு குவியும் வாழ்த்துகள்!

எம்பியாகும் இசைஞானிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா(Ilayaraja) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Continues below advertisement

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது புகழுக்கு மேலும் ஒரு அங்கீகாரமாய் இளையராஜாவுக்கு தற்போது ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்துள்ளது. எம்பியாகும் இசைஞானிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement