அமெரிக்கா சென்று திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜா இன்று மாநிலங்களவை நியமன எம்பியாக பதவியேற்று கொள்கிறார். இதற்காக நேற்று டெல்லி சென்ற இளையராஜாவிற்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன எம்பியாக நியமிக்கப்பட்ட பி.டி.உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் பதவியற்றுக்கொண்டனர். ஆனால் இளையராஜா அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியது. 


அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இளையராஜா அங்கு சென்றுவிட்டதால், அவரால் அன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்பதால் இளையராஜா இன்று நியமன எம்.பி.யாக பதவியேற்கிறார். 


கடந்த ஜுலை 6 ம் தேதி கலை, அறிவியல், விளையாட்டு,பொருளாதாரம், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். அந்த வகையில் எதிர்பார்த்ததைப் போலவே மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  






இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்த இளையராஜா என்ற மேதை தனது படைப்புகள் மூலம் பல வகையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து இவ்வளவு தூரம் அவரை நியமன எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண