நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுப்பது சுதந்திரம் என்றால், ஹிஜாப் அணிவது எப்படி ஒடுக்கப்படுவதாகும் என்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபு ஆஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரன்வீர்சிங் நிர்வாண புகைப்படம்:
பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் அமெரிக்காவைச் சேர்ந்த பேப்பர் மேகசின் எனும் பத்திரிகைக்காக முற்றிலும் நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ரகரகமான உடைகளுக்காகவே பேசப்பட்டுவந்த ரன்வீர் சிங் நிர்வாண போட்டோவிற்காக கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். ரன்வீர் சிங் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதையே ஒரு பெண் செய்திருந்தால் இந்த புகைப்படங்கள் பாராட்டும் ஒன்றாக இருந்திருக்குமா? அந்த பெண்ணின் வீட்டை எரிக்க வேண்டும், போராட்டங்களை நடத்த வேண்டும் என்றிருப்பார்கள். அப்பெண்ணிற்கு கொலை மிரட்டல்கள் விடுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களை செய்திருப்பார்கள் என்று பெங்காலி நடிகை மிமி சக்கரவர்த்தி கூறியிருந்தார்.
அபு அசீம் ஆஸ்மி விமர்சனம்:
ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் தொடர்பாக அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் பிரிவு மகாராஸ்டிராவிலும் இயங்கி வருகிறது. மகாராஸ்டிரா மாநில தலைவரான அபு அசீம் ஆஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ரன்வீர் சிங்கை விமர்சித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
”நிர்வாணம் கலை.. ஹிஜாப் ஒடுக்கப்படுவதா?”
அதில், “உங்கள் உடலைக் காட்டுவது தான் கலை மற்றும் சுதந்திரம் என்று கூறினால் பிறகு ஏன் ஒரு பெண் தனது உடலை தங்களது கலாச்சாரப்படி ஹிஜாப் கொண்டு மூட நினைத்தால் அதை ஒடுக்குமுறை, மதத் தீண்டாமை என்ன்று சொல்லுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ”எந்த மாதிரியான சமூகம் நமக்குத் தேவை? உங்களது நிர்வாணப் புகைப்படங்களை பொதுவில் வைப்பது சுதந்திரம் என்றால், ஹிஜாப் அணிவது மட்டும் ஏன் இல்லை” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கடந்த ஆண்டு இறுதியில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வரக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை ஆதரித்து கர்நாடகாவின் பல்வேறு கல்லூரிகள் அறிவிப்பை வெளியிட்டன. இதனால், பள்ளி கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவ, மாணவிகள் மத அடையாளங்கள் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர கர்நாடக அரசு தடை விதித்தது. இந்த உத்தரவினை கர்நாடக நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனயொட்டி சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் அபுஆஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார். அபு ஆஸ்மி மட்டுமல்லாது பல்வேறு அரசியல் தரப்பினரும் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்பட ஷீட்டிங்கை விமர்சித்து வருகின்றனர்,