தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வந்தார். முதலில் மகாகவி சுப்ரமணியன் பாரதியின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்ற அவர், தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து,
பல்கலைக்கழக கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர், அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற புத்தகத்தினை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், நாட்டின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீ அரவிந்தர் சமுதாயத்தின் முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார். "குஜராத்தில் ஸ்ரீ அரவிந்தரோடு நிறையக் குஜராத்திகள் பணிபுரிந்ததை அவர் பெருமையாக உணர்கிறேன்.
ஸ்ரீ அரவிந்தருக்கு 75 வயதாக இருந்தபோது, தேசம் சுதந்திரம் பெற்றது, அவரது 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் போது, தேசம் அதன் 75வது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. மேலும் தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும்," என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையில் பேசினார். விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்