காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி, ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகமாக இருக்காது, அது ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கும் என குறிப்பிட்டார்.






மேலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், குறிப்பாக பட்டியலின பழங்குடியின மக்களுக்கு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  மேலும், வரும் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்திய அவர், தானும் மண்ணின் மைந்தன் என்பதை எடுத்துரைத்து, தன்னையும், தனது கட்சியையும், அதன் தலைவர்களையும் ஆதரிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். குஜராத் தேர்தலில் வாக்கு கேட்கும் போது மோடி தனது குஜராத்தி அடையாளத்தை முன்னிறுத்துவதாக அவர் விமர்சித்தார்.


"ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் அல்ல, சர்வாதிகாரம், அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். சிந்தித்துப் பாருங்கள். உங்கள் உரிமைகளை அறிந்து, அதைப் பெற நீங்கள் போராட வேண்டும். உங்களிடம் வலிமை இருந்தால், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்களுக்கு மதிப்பு இருக்கும், நீங்கள் ஒன்றுபடவில்லை என்றால், பிரிட்டிஷார் பயன்படுத்திய மற்றும் இப்போது மோடி பயன்படுத்தி வரும் பிரித்தாலும் ஆட்சி கொள்கையை உங்கள் மீது அனைவரும் பயன்படுத்துவார்கள். சமூகம் இதை மனதில் கொள்ளுங்கள்." நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.






காலியாக உள்ள 30 லட்சம் அரசுப்பணிகளை பிரதமர் மோடி நிரப்பவில்லை. ஒருவேளை நிரப்பினால் பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். ஆகையால், ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர் என  மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.