பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். எரிபொருளின் விலை அதிகரித்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 85 டாலராக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதுதவிர கச்சா எண்ணெய் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் வள நாடுகளுடன் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசி வருவதாக கூறப்படுகிறது.



இப்படி பல இடங்களிலும் பலரும் பெட்ரோல் விலை குறைப்பை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க, ‘பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தொட்டால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசு அனுமதி வழங்கும்,’ என்று அசாம் மாநில பாஜ தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி உள்ளது. அசாம் மாநில பாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபேஷ் கலிதா தமுல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 ஆக உயரும் போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம். இருப்பினும், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்" என்று கூறியுள்ளார். இவரது இக்கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அசாம் மாநில காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் போபீதா சர்மா கூறுகையில், "சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலையை பாஜ அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது. அதன் பயனை மக்களுக்கு வழங்க அவர்களுக்கு மனமில்லை," என்று கூறினார்.



சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.01 ஆகவும் டீசல் ரூ. 98.92-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.103.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ.99.26க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.