பாதுகாப்பு பணியின் பொழுது எந்த ஒரு சூழ்நிலையிலும் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர் அல்லது துணை இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு திருத்த  விதிகளின் அடிப்படையில் வீர மரணம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய  தீர்மானம் அம்மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.




2016 ஆம் ஆண்டு தீர்மானம் :



  • 2016 ஆண்டு கொண்டு வரப்பட்ட  தீர்மானத்தில் , பயங்கரவாதம் அல்லது நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்பு/ துணை ராணுவப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் 


 



  • எல்லையில் துப்பாக்கிச் சூடு அல்லது குண்டுவெடிப்பில்  அல்லது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் போது ,சந்தேகத்திற்குரிய நபரை பிடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடு வழங்கப்படும்.


 



  •  நீரில் மூழ்குதல், தீயை அணைத்தல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுதல், வாகன விபத்து, புல்லட் காயங்கள் அல்லது வெடிகுண்டு வெடிப்பால்  உயிரிழக்கும் வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.


 



  • இது தவிர ,  கடுமையான குளிர் நிலப்பரப்பில் தாழ்வெப்பநிலை  காரணமாக உயிழத்தல் . அதே போல கடுமையான வெப்பமான நிலப்பரப்பில் வெப்பத் தாக்குதலால் இறந்த வீரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.


 


2016 ஆம் ஆண்டு தீர்மானத்தின் படி மேற்க்கண்ட வரையறைக்குள் வரும் இராணுவ மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாநில உள்துறை வெளியிட்டுள்ள தீர்ப்பில் பணியின் பொழுது வீரர்கள் ‘எந்த ஒரு சூழலில் ‘ உயிரிழந்தாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.




புதிய தீர்மானத்தின் கூடுதல் அம்சங்கள் :



  • கொல்லப்பட்ட பாதுகாப்புப் படை/ துணை ராணுவப் படை வீரர்களின்  மனைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ. 5,000 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராணுவ வீரர் திருமணமாகாதவராக இருந்தால், அவரது தாய்க்கு ரூ.50,000 இழப்பீடும், மாதம் ரூ.500ம் பெற உரிமை இருந்தது. இப்போது இழப்பீடு ரூ.5 லட்சமாகவும், பெற்றோர் இருவருக்கும் மாதம் ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


 



  • முன்னதாக பாதுகாப்புப் படை/ துணை ராணுவப் படை வீரர்களின் இரண்டு குழந்தைகள் படிப்பை முடிக்கும் வரை அல்லது 25 வயதை அடையும் வரை தலா ரூ. 500 மாதாந்திர உதவியைப் பெற தகுதியுடையவர்கள், இப்போது அவர்கள் தலா ரூ. 5,000  வழங்கப்படும்.


 



  • பணியில் இருக்கும் போது சில சூழ்நிலைகளில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட காயம் அல்லது இயலாமைக்கு ஆளான  வீரர்களுக்கு  ரூ. 50,000 உதவித்தொகை  மற்றும் மாதம்  ரூ.1,000 ரூபாய் உதவியாக வழங்கப்பட்டது. தற்போது உதவித் தொகை ரூ.2.50 லட்சமாகவும், மாதாந்திர உதவியாக ரூ.5,000 உயர்த்தப்பட்டுள்ளது.


 



  • வீர விருதுகளைப் பெறும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பண விருதுகளையும் மாநில அரசு உயர்த்தியுள்ளது: பரம் வீர் சக்ராவுக்கு ரூ. 1 கோடி, ரூ. 22,500; அசோக் சக்ராவுக்கு ரூ.1 கோடி, ரூ.20,000; மகாவீர் சக்ரா ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.50 லட்சம்; கீர்த்தி சக்ராவுக்கு ரூ.50 லட்சம்.