ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா இரண்டாவது பதிப்பு உலகளவில் அசாதாரணமான குழப்பத்திற்கு மத்தியில் நடைபெறுகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இது அதன் வழக்கமான சுழற்சியில் இருந்து இயற்கையால் கொண்டுவரப்பட்ட ஒரு குழப்பம். பழிவாங்கலுக்காகவும் புதுப்பித்தலுக்காகவும் துடிக்கும் சக்திகள் வரலாற்றுக்கு சவால் விடும் சமயத்தில், குழப்பமான சூழல் நிலவி வருகிறது. சமூகத்தை தொழில்நுட்பம்  ஜனநாயகப்படுத்துவதைத் தொடர்ந்து விஞ்ஞானம் சாதித்துக்கொண்டிருக்கும் காலம் இது.


ஐரோப்பாவில் ஒரு பழைய வல்லரசின் நவீன பேரரசர் என்ற பார்வை கொண்ட மனிதரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு போரை எண்ணி தயக்கம் கொண்ட இளைஞர்கள் கொடும் நிகழ்வை நோக்கி அணிவகுத்துச் செல்கிறார்கள். புரிந்துகொள்ள முடியாத சீனாவில், பேரழிவு தரும் தொற்றுநோயை இரும்புக்கரம் கொண்டு கையாள்வது குறித்து முணுமுணுப்புகள் வெளிப்படுகின்றன.


உலக விவகாரங்கள்:


ஈரானில், துணிச்சலான பெண்கள் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறார்கள். வட அமெரிக்காவில், சமூக பழமைவாத சக்திகள் தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன. தெற்காசியாவில் பொருளாதார ஸ்திரமின்மை எதிர்பார்ப்புகளைத் தடம்புரளச் செய்து, ஆளும் சக்திகளை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. 


நம் நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை பிரச்னை, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு பிரச்சனை தொடர் கிளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாடு கடந்து எல்லை கடந்து சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளனர் அகதிகள். இந்த குழப்பத்தின் மையமாக அதிகாரத்தின் அச்சில் மாற்றம், பழைய கூட்டணிகளை கேள்விக்குள்ளாக்குவது உள்ளது.


புதிய இந்தியா:


உலக வரலாற்றில் இன்னொரு பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் இந்த தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல்கள், புத்துயிர் பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற அரசியல் எதிர்ப்பு மற்றும் துறைகளில் வழிநடத்த பொறுமையற்ற ஒரு புதிய தலைமுறையுடன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக 2023 உள்ளது.


ஏபிபி நெட்வொர்க் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பில், "புதிய இந்தியாவைக் கொண்டாடுகிறோம்: உள்ளார்ந்து பார்த்து, அணுகுகிறோம்" என்ற தலைப்பில் தலைவர்கள், தொழில் அதிபர்கள், கலாசார தூதர்கள், அரசியல் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.