ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆப் இந்தியா உச்சி மாநாடு, இந்தாண்டும் வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது. "புதிய இந்தியா: உள்நோக்கி பார்த்து அணுகுவது" என்பது இந்தாண்டு தீம் பொருளாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா மாநாட்டை அலங்கரிக்க உள்ள பிரபலங்கள்:


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2ஆவது மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.


பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாடகர்கள் லக்கி அலி மற்றும் சுபா முத்கல், எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ் மற்றும் தேவ்தத் பட்டநாயக், நடிகைகள் சாரா அலி கான், ஜீனத் அமன், நடிகர்கள்  ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் வாஜ்பாய், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, விளையாட்டு நட்சத்திரங்கள் ஜ்வாலா குப்தா மற்றும் வினேஷ் போகட் ஆகியோரும் முக்கிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.


ஐடியாஸ் ஆப் இந்தியா 2ஆவது உச்சி மாநாடு எப்போது நடைபெறுகிறது?


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பு இன்றும் (பிப்ரவரி 24) நாளையும் (பிப்ரவரி 25) நடைபெறுகிறது.


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டை நேரலையாக பார்ப்பது எப்படி?


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாடு, ABP live youtube சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் அமர்வுகள் ஏபிபி நெட்வொர்க்கின் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.


ஈரானில் ஹிஜாப் சட்டத்தை மீறிய 22 வயதான பெண் மாசா அமினியின் காவல் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் தெருக்களில் இறங்கியதை ஈரானின் வரலாறு கண்டுள்ளது. இதேபோல் வட அமெரிக்காவில் சமூக பழமைவாத சக்திகள் சேர்ந்து, தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன.


தெற்காசியாவோ பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிகள் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. எல்லைகளைத் தாண்டி சுதந்திரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து நுழைவதற்கு வழியில்லாமல் காத்திருக்கும் அகதிகளின் பிரச்சனைகள் தொடர்கின்றன. வேலைவாய்ப்பு மற்றும் உயரும் செலவுகள் ஆகியவை வீடுகளில் முக்கியப் பிரச்சினைகளாக மாறிவிட்டன.


இந்தியாவை பொறுத்தமட்டில்  2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. உலக வரலாற்றில் இத்தகைய தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல், எழுச்சி பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற எதிர்ப்பரசியல் என உலகில் முக்கியமான அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த உச்ச மாநாடு நடைபெறுகிறது.