ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். 


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மும்பையில் இரண்டு நடைபெறும் மாநாட்டு,  உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்பட்டுள்ள சமூக -  அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. 


இந்த ஆண்டின் உச்சிமாநாட்டுக்கு, 'புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது' என்பது கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 


ஏபிபி ஊடக குழுமத்தின் இந்த மாநாட்டில்  இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள், இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


சாதாரண மனிதனின் அசாதாரண பயணம்:


உச்சி மாநாட்டின் முதல் நாளான நாளை நடைபெற உள்ள நிகழ்வில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். "முதலில் குடிமகன்: சாதாரண மனிதனின் அசாதாரண பயணம்" என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். நாளை இரவு 9:30 மணிக்கு நடைபெற உள்ள அமர்வில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகிறார்.


தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்து வருகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி வரவிருக்கும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


ஐடியாஸ் ஆப் இந்தியா 2ஆவது உச்சி மாநாடு எப்போது நடைபெறுகிறது?


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பு நாளையும் (பிப்ரவரி 24) நாளை மறுநாளும் (பிப்ரவரி 25) நடைபெறுகிறது.


ஏபிபி நெட்வொர்க் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டை நேரலையாக பார்ப்பது எப்படி?


ஏபிபி நெட்வொர்க் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாடு,  ABP Live YouTube சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாட்டின் அமர்வுகள் ஏபிபி நெட்வொர்க்கின் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.