தோல் மற்றும் மென்மையான திசு நோய்த் தொற்றுகளுக்கு ஐந்து நாட்களுக்கு ஆன்ட்டி பயாடிக்ஸை பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும், நிமோனியா தொடர்பானவற்றுக்கு எட்டு நாட்களுக்கு ஆன்ட்டி பயாடிக்ஸை பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. 


சிகிச்சையை மட்டுப்படுத்தும் ஆன்ட்டிபயாடிக்:


ஆன்டி பயாடிக்கை அதிகமாக பயன்படுத்துவதால், கடுமையான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டிபயாடிக்கானது சிகிச்சையை மட்டுப்படுத்துவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.


மேலும் ஆண்டிபயாடிக் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் தெரிவிக்கையில்,  பொதுவாக, கடுமையான காய்ச்சல், வென்டிலேட்டர்-தொடர்புடைய நிமோனியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு மட்டுமே ஆண்டிபயாடிக் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.


ஆகையால் , சிகிச்சையை மதிப்பீடு செய்து, சிகிச்சையின் காலம் குறித்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள் என்றும், 2021 ஆண்டில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, வரை நடத்தப்பட்ட ஐ.சி.எம்.ஆர் கணக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள நோயாளிகளில் ஒரு பெரிய பகுதியினர் இனி கார்பபெனெம், நிமோனியா மற்றும் செப்டிசீமியாவுக்கு சிகிச்சையளிக்க சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் பயன்பாட்டிலிருந்து பயனடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.


மருந்துகளின் திறன் குறைவு:


தரவுகளின்படி , தொடர்ந்து ஆண்டி பயாடிக் மருந்துகளை எடுப்பதன் விளைவாக, பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருந்துகளின் வேலை செய்யும் திறன் குறைந்து காணப்படுகிறது. ஈ கோலி பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் இமிபெனெம் ஆண்டி பயாடிக் 2016 ஆம் ஆண்டில் 14 சதவீதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டில் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இந்த அறிக்கையின்படி கடுமையான நோய்வாய்ப்பட்ட (ஐ.சி.யூ) நோயாளிகளுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை ஆண்டிபயாடிக்  ஏற்படுத்துகிறது.


2016 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் 28.4 சதவீதம் முதல் 42.6 சதவீதம் வரை எம்.ஆர்.எஸ்.ஏ விகிதங்கள் அதிகரித்துள்ளன. என்டெரோகாச்சி என்பது மற்றொரு முக்கியமான நோய்க்கிருமியாகும், இது விரைவாக வளர்ந்து வருகிறது. ஆண்டிபயாடிக் அதிகமாக பயன்படுத்துவதால், கடந்த சில ஆண்டுகளில் மருந்து உணர்திறன் கணிசமாக மாறிவிட்டது என்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.


ஆகையால், தோல் மற்றும் மென்மையான திசு நோய்த் தொற்றுகளுக்கு ஐந்து நாட்களுக்கு ஆன்ட்டி பயாடிக்ஸை பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும், நிமோனியா தொடர்பானவற்றுக்கு எட்டு நாட்களுக்கு ஆன்ட்டி பயாடிக்ஸை பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்கள்களை வகுத்துள்ளது. 


Also Read: Chandrapur Bridge Collapse: மகாராஷ்டிராவில் திடீரென உடைந்த ரயில்வே நடைபாலத்தின் ஒரு பகுதி...காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி


Also Read: Birth Certificate Mandatory: அரசு வேலையில் சேர இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்... இது முக்கியம்.. இதைப் படிங்க..