மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் பல்ஹர்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் தண்டவாளங்களை கடப்பதற்காக, நடைபாதை மேம்பாலம் உள்ளது.
இந்த நடைபாதை மேம்பாலத்தில், இன்று மாலை சுமார் 5 மணியளவில், திடீரென ஒரு பகுதி உடைந்துள்ளது. அப்போது நடை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் பலர் விபத்துக்குள்ளாயினர்.
விபத்துக்குள்ளானவர்கள், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று சி.பி.ஆர்.ஓ சி.ஆர்.,சிவாஜி சுதர் தெரிவித்துள்ளார்
சந்திரபூர் கார்டியன் அமைச்சர் சுதிர் முங்கந்திவார் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளாட்பார்ம் எண் 1 மற்றும் 2 ஐ இணைக்கும் பகுதியின் ஒரு பகுதி சரிந்தது, ஆனால் பாலத்தின் மற்றொரு பகுதி அப்படியே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், அக்டோபர் 30 அன்று, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில், 135 பேர் இறந்தனர். தொங்கு பாலத்தின் பராமரிப்பு, இயக்கம் மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஒப்பந்ததாரரான ஓரேவா குழுமம், பாலம் இடிந்து விழுந்தபோது 3,165 டிக்கெட்டுகளை விற்றது, தடயவியல் அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது