ராஜஸ்தான் மாநிலம் ஜெயசால்மரில் இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து, இந்திய விமானப்படை வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், இன்று (24.12.2021) இரவு 8.30 மணியளவில் இந்திய விமானப்படையின் மிக்-19 விமானம், பயிற்சியின் போது ஜெய்சால்மர் விமான தளத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடன் பயணித்த 12 படை வீரர்களும் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்சிக்குள்ளாக்கியது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்திய விமானப்படையின் ஏழு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகியதாக பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் முன்னதாக மக்களவையில் தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை விமானப்படை விமானங்கள் விபத்து தொடர்பான விவரங்கள்:
| விமானங்கள் வகை | |||||
| நிதியாண்டு | போர் விமானங்கள் | ஹெலிகாப்டர் | பயிற்சி வாகனம் | போக்குவரத்து வாகன |
|
| 2014-15 | 07 | 01 | 02 | 01 |
|
| 2015-16 | 04 | 01 | 01 | - |
|
| 2016-17 | 06 | 02 | 01 | 01 |
|
| 2017-18 | 02 | - | 03 | - |
|
| 2018-19 | 07 | 02 | 02 | - |
|
| 2019-20 | - | - | - | 01 | |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்