கடந்த ஏப்ரல் 7ம் தேதி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது பிரபல நடிகர் சோனு சூட்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தவித்து வந்த பலரை தனது சொந்த செலவில் தாயகம் அழைத்துவந்தார் சோனு என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சேவையை பாராட்டி பிரபல தனியார் விமான சேவை நிறுவனம் அவருடைய உருவத்தை விமானத்தின் அச்சிட்டு பெருமைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நடிகர் சோனு சூட் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 47 வயது நிரம்பிய சோனு சூட் பஞ்சாபில் பிறந்தவர் என்றபோதும் தமிழில் 1999ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் சோனு நடித்துள்ளார். இந்த ஆண்டு தமிழில் தமிழரசன் உள்பட 3 திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான படங்களின் வில்லனாக நடித்துவரும் சோனு நிஜ வாழ்வில் ஒரு ஹீரோ என்பதை இந்த கொரோனா காலகட்டத்தில் நிரூபித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் விரைவில் குணம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். சோனு சூட் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பலரும் 'நான் எப்படி இருக்கின்றேன் என்று பலரும் என்னை நலம்விசாரித்து வருகின்றது. நான் நலமோடுதான் இருக்கிறேன், ஆனால் கொரோனா தான் அவஸ்தைப்படுகிறது' என்று கூறி ரசிகர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
அதே சமயம் தான் சற்று ஓய்வில் இருப்பதாகவும், ஆனால் 24 மணி நேரமும் தான் எல்லாவித உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலம் மருத்துவ ரீதியாக கோரிக்கை வைப்போருக்கு தன்னால் இயன்ற உதவியை அவர் செய்து வருவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது. சோனுவின் இந்த பதிவு அவரை பின் தொடர்பவர்களுக்கும், அவரது ரசிகர்களும் அவர் நலன் குறித்த அப்டேட்டால் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை பின் தொடரும் ரசிகர்கள், கவனமுடன் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் சம்மந்தப்பட்டவர்களிடம் எழுகிறது. பொதுஇடங்களில் கூட்டம் கூடுவதை, நெருக்கடியில் பயணிப்பதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும். முககவசம் மற்றும் சமூக இடைவெளி தான் நம்மை காக்கும் என்பதை தங்கள் ரசிகர்களுக்கு தெரிவிக்க பிரபலங்கள் முன் வர வேண்டும்.