இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர். அவர் பெயர் நசீர் கான். அந்தக் காரின் விலை ரூ.12 கோடி எனக் கூறப்படுகிறது.
Mclaren 765 LT Spider
McLaren கார் நிறுவனத்தின் Mclaren 765 LT Spider காரை தான் அந்த நபர் வாங்கியுள்ளார். இப்போது வரை இந்தியாவில் விலை உயர்ந்த சூப்பர் கார் இதுதான். இந்த காரின் முதல் சொந்தக்காரர் ஆகியுள்ள நசீர் கான் ஒரு தொழிலதிபர். இவருக்கு 47 வயதாகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் இவர். அவர் வாங்கியுள்ள Mclaren 765 LT Spider கார் வல்கனோ ரெட் என்ற சிவப்பு நிறம் கொண்டதாகும். பார்ப்பதற்கு உண்மையிலேயே எரிமலையில் இருந்து புறப்படும் சிவப்பு தீ பிழம்பு போல் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கிறது இந்த கார்.
விலை ரூ.12 கோடி
ஐதராபாத்தை சேர்ந்த இந்த தொழிலதிபர் நசீர் கான் வாங்கியுள்ள இந்த காரின் விலை ரூ.12 கோடி. இது தவிர நசீர் கானிடம் ஃபெராரி 82 சூப்பர் ஃபாஸ்ட், லம்போர்கினி அவேன்டேடர், ஹுராகான், போன்ற பல உயர் ரக கார்கள் உள்ளன. நசீர் கானின் சொத்து மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.
மெக்லாரன் சிறப்புகள் என்ன?
Mclaren 765 LT Spider என்ற இந்த காரில் ட்வின் டர்போ சார்ஜ்ட் வி8 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இதில் 7-speed கியர் பாக்ஸ் உள்ளது. 765 Ps, 800 Nm பீக் டார்க் கொண்டது.