தமிழ்நாடு:



  • அந்தமானுக்கு தென் கிழக்கு - வடக்கு சுமத்ராவில் காற்று சுழற்சு வலுவடைந்தது தமிழக கடலோர பகுதிக்கு வர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

  • சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

  • அமைச்சராக பொறுப்பேற்றவுடன் 3 முக்கிய கோப்புகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து - முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு

  • சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

  • கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆவினில் 12 வகை கேக் அறிமுகம் - விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் நாசர்

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • பொது இடங்களில் ஒரு நாளைக்கு 43 பேர் மட்டுமே புகைக்கிறார்களா? புகைத்தடை சட்டம் காட்சிப் பொருளாகி விடக்கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஏற்கெனவே இருந்த அமைச்சர்களின் 10 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. 


இந்தியா:



  • சீன எல்லை மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பு: இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

  • மக்களையில் நிதி அமைச்சர் தகவல்; பணவீக்கத்தை மேலும் குறைக்க நடவடிக்கை - துணை மானிய கோரிக்கை நிறைவேற்றம்

  • 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் மீண்டும் ராகுல் பேட்டி - உ.பி. காங்கிரஸ் தலைவர் பேட்டி

  • இந்தியா ஸ்டேக் இன்று உலகளாவிய தெற்கிற்கான வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • டெல்லியில் 12-ஆம் வகுப்பு மாணவி மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • உத்தரப் பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

  • தேசிய புலன் விசாரணை அமைப்பால் 4 ஆண்டுகளில் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு - மத்திய அரசு தகவல்


உலகம்:



  • இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நடத்தியுள்ளார். 

  • காங்கோ நாட்டில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழப்பு

  • ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ரஷ்யாவுக்கு ஆயுத வினியோகம் செய்ததாக ஈரான் தொழிலதிபர்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.


விளையாட்டு:



  • புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்- புனே அணிகள் இன்று மோதல்

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி

  • இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

  • 2-வது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவாவைத் தோற்கடித்தது பிரான்ஸ். வரும் 18-ம் தேதி இரவு அர்ஜென்டீனாவுடன் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை.