விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. சில நேரங்களில், விபத்துகளும் நிகழ்கின்றன. விமான பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்த விமானி: இந்த நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டது. ஆனால், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமான கண்டறிந்தார். இதையடுத்து, விமானத்தை ஹைதராபாத்திலேயே தரையிறக்கியுள்ளார்.


138 பயணிகளை ஏற்றி செல்ல விருந்த MH 199 விமானம் அதிகாலை 12.15க்கு புறப்படவிருந்தது. ஆனால், நள்ளிரவு 12.45 மணிக்கே புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப காரணங்களால் விமானம் தரையிறங்கப்பட்டது.


இதேபோன்று, நேற்று முன்தினம், தேசிய தலைநகர் டெல்லியிலிருந்து பாக்டோக்ராவுக்குச் செல்லும் இண்டிகோ விமானமும், அதிக வெப்பம் காரணமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு டெல்லி விமான நிலையத்தில் சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.


விமானத்தில் தொடரும் கோளாறு: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:10 மணிக்கு அந்த இண்டிகோ விமானம் 6E 2521 புறப்படவிருந்தது. மேற்கு வங்கம் சிலிகுரி அருகே அமைந்துள்ள பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு மாலை 4:10 மணிக்கு தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது.


 






இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அதிக வெப்பம் காரணமாக டெல்லி-பாக்டோக்ரா விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக பயணிகளின் பாதுகாப்பிற்கு இண்டிகோ நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது.


உடனடியாக புறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு உடனடி தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. மேலும், விமான நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியாத காரணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்" என குறிப்பிட்டிருந்தது. பின்னர், அந்த விமானம் மாலை 5:51 மணிக்கு புறப்பட்டது.


கடந்த ஜூன் 8 ஆம் தேதி, மும்பை விமான நிலையத்தில் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரு நிமிட இடைவெளியில் ஏர் இந்தியா விமானமும் இண்டிகோ விமானமும் ஒரே ஓடுபாதையில் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதையும் படிக்க: Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தல்