Breaking News LIVE: விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
விழுப்புரம்: மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற மல்லியா (42) என்பவர் கைது. அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்.
விஷச் சாராய சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து வருவாய் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வரும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 42 பேர் உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார்.
Hooch Tragedy : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய மரணங்கள்.. மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறினார்
21 பேரின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகள் தொடங்கியது. கனமழை இருப்பதால், மண்ணெண்ணெய் ஊற்றி உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
விஷச்சாராயத்தால் மரணம் அடைந்த கருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 பேரின் உடல்களை தகனம் செய்ய ஒரே இடத்தில் ஏற்பாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் : உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கருணாபுரம் சுடுகாட்டில் கண்ணுக்குட்டி உள்ளிட்டோட் விஷச்சாராயம் விற்றதாக எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்ய ஏற்பட்டுகள் செய்யப்பட்டு வருகிறது. 21 உடல் தகனம் செய்யவும், 6 உடல்கள் அடக்கம் செய்யப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. 103 பேருக்கு 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.
சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்." என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஓசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக வந்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் பயணிகள் பேருந்துபோல இயங்குவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது! இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை! நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு முக்கியம், மக்கள் இல்லை என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ., செந்தில்குமார் புகாரளித்தும் கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரமிக்கவர்களுக்கு தொடர்பு இருப்பதாக இபிஎஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலன் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் ஓய்வுப்பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தவிடப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உடனனான ஆலோசனைக்கு பிறகு டிஜிபி சங்கர் ஜிவால் கள்ளக்குறிச்சிக்கு விரைகிறார்.
விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரை பிடித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதையடுத்து வழக்கு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி: கருணாபுரம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று பாதிக்கப்படடவர்கள் இருக்கிறார்களா என மாவட்ட மருத்துவ இயக்குநர் ஆய்வு. இதுவரை 109 பேர் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிந்தோர், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லவுள்ளார்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.16 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. 9மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை 42 பேர் சிகிச்சைக்காக அனுமதி. இதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
33 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதில் நான்கு பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தற்போது வரை கள்ளச்சந்தையில் வெளி மாநில மதுபாட்டில்கள் மற்றும் அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கூறி 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 195 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை உடல்களை அடக்கம் செய்வதற்காக இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதைப்பவர்களுக்கு தனியாக இடமும், எரிப்பவர்களுக்கு தனியாக இடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 32 பேர் உயிரிழப்பு, 100க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி செல்கிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் 26 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, ஆகிய மூன்று பேர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆனந்தன்(50), ரவி(60), மனோஜ்குமார் (33), ஆனந்த் (47), விஜயன்(59) ஆகிய ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்தது தமிழ்நாடு அரசு
கன மழையின் காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிதமான மழைவரை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை நிலவரங்கள் சொல்லியுள்ளன.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் உயிரிழப்பு - 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் மற்றும் குற்றங்கள் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் 98840 42100 (Help Line) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் வேண்டுமென்றே காவல்துறை கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை கண்டும் காணாதது போல் செயல்பட்டதாகவும் புகார் எழுந்து வருகிறது.
இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், உள்ளிட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலிசார் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மற்ற மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்ததால் பதற்றம் - இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மூத்த அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் எனவும் அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் மாவட்ட எஸ்.பி., மற்றும் மதுவிலக்குத்துறை போலீசார் ஆகியோர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -