ஹைதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்த முயன்ற போது ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் சயாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலணியில் வசித்து வந்த 6 வயது சிறுமியை கடந்த 9 ஆம் தேதியில் இருந்து காணவில்லை. இதனையடுத்து குழந்தை எங்கு சென்றது என தெரியாமல் பெற்றோர்கள் தேடிவந்த நிலையில் தான், மறுநாள் சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலைக்கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 6 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானதோடு, கழுத்தினை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது. பின்னர் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை பாலியல் வன்முறை செய்ததோடு கொலை செய்தது பக்கத்து வீட்டுக்காரரான பல்லகொண்ட ராஜூ என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் தலைமறைவாகியுள்ள பல்லகொண்ட ராஜூ என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அதோடு இவரைக்குறித்து தகவல் அளித்தால் ரூபாய் 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் பேரில், 30 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜூ என்பவரை போலீசார் கைது செய்வதற்கான சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரைப்பார்த்தும் ஓடிய ராஜூ, ஓடும் ரயிலில் முன் விழுந்து இறந்ததாகக்கூறப்படுகிறது. இவர் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டறியப்பட்டதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்துள்ளனர். 6 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவரை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற தெரிவித்து வந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இப்படி சிறுமியின் பாலியல் வன்முறை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி பேசியது பெரும் விவாதத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இவர், 6 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்தவரை நிச்சயம் கைது செய்து என்கவுடன்ரில் கொலை செய்வோம் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஒரு முக்கிய அரசுப்பொறுப்பில் உள்ள நபர், சட்டத்தைக் கையில் எடுத்து பேசுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் இந்தியாவின் முன்னாள் நீதிபதி எஸ்ஏ போப்டே, நீதி ஒருபோதும் வழிவாங்கும் வடிவத்தை தன் கையில் எடுக்கக்கூடாது என கூறியுள்ளார். மேலும் டிசம்பர் 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் ஒரு என்கவுன்டரை விசாரிக்க விசாரணைக்குழுவை நியமித்துள்ளது. இதுப்போன்று அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது தான் பல்வேறு நடைமுறைகள் இருந்து வரும் நிலையில் தெலுங்கானா அமைச்சர் பேசியது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- ச
இதோடு மற்றொரு வழக்கில் 27 வயதான கால்நடை மருத்துவர் பாலியல் வன்முறை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் ஹைதராபாத் போலீசார் என்கவுண்டர் செய்தப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பொலீசாரின் இச்செயலை பாராட்டினர். என்னதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை நாம் கடைப்பிடித்தாலும் இதுப்போன்று கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொலை செய்தவர்களுக்கு என்கவுடன்டர் போன்ற தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படும் என மக்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இதோடு 6 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளியை கண்டுப்பிடித்துவிட்டதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கேடி ராமாராவ் டிவிட்டரில், குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டதாக தவறாக டிவிட் செய்திருந்தார். இதனையடுத்து இந்த தவறான வாபஸ் பெறுவதாகவும் குற்றவாளியை தேடி தனிப்படை அமைத்துள்ளதாக ரீடிவிட் செய்திருந்தார்.