உலகில் ஆச்சர்யத்தையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கக்கூடிய உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள். நேரில் நம்மை உறைய வைத்து முதுகை சில்லிட வைக்கும் அதே அனுபவத்தை பாம்புகள்
வீடியோக்களிலும் வழங்குகின்றன.
அந்த வகையில் முன்னதாக மலைப்பாம்பு ஒன்று மாடிப்படியின் கைப்பிடியின் மேல் ஊர்ந்து நெளிந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்த வீடியோவை இந்திய வனப் பணி அலுவலர் சுசாண்டா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நிலையில், மாடிக்கு செல்ல படிகள் தேவையில்லை இப்படியும் செல்லலாம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இதேபோல் முன்னதாக வானவில் வள்ள பெரிய மலைப்பாம்பை தன் நண்பன் என மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தும் வீடியோ இன்ஸ்டாவில் லைக்குகளை வாரிக் குவித்து வைரலானது.
வானவில் வண்ணத்தில் பார்த்தவுடன் முதுகெலும்பை சில்லிட வைக்கும் தோற்றத்தைக் கொண்ட இந்த மலைப்பாம்பை கையில் தூக்கிக் கொஞ்சுகிறார் ஜே ப்ரூவர் எனும் மிருகக் காட்சி சாலை காப்பாளர். அது மட்டுமல்லாது அதனை தன் நண்பன் என அறிமுகப்படுத்தியும் வைக்கிறார்.
பல ஆண்டுகளாக இந்த மலைப் பாம்பை தான் பராமரித்து வந்துள்ளதாகவும் தற்போது இருவரும் நண்பர்களாகி உள்ளதாகவும் கூறி, ஜே ப்ரூவர் மலைப்பாம்பைக் கட்டியணைத்து வீடியோவில் நட்பு பாராட்டுகிறார். இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
இதேபோல் இரட்டைத் தலை பாம்பு மற்றொரு பெண் காப்பாளர் அறிமுகம் செய்து வைக்கும் வீடியோவும் இன்ஸ்டாவில் லைக்குகளைக் குவித்து நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.