குழந்தைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவர்கள் ! சில நேரங்களில் அவர்களிடம் நாம் விளையாட்டாக கேட்கும் கேள்விகளுக்கு  சிந்திக்க வைக்கும் அளவுக்கு பல பதில்களை கொடுப்பார்கள் . சில நேரங்களில் உண்மையான பதில்களையும் கூட ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பகிரும் பொழுது கூடுதல் நகைச்சுவையாக இருக்கும். அப்படியான ஒரு பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



நம்மில் பலருக்கு தேர்வின் பொழுது கதை அடித்த அனுபவம் இருக்கும் ! எனது நண்பர்களுள் சிலர் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக சினிமா பாடல்களை எழுதி வைத்திவிட்டு வந்ததாக கூறியிருக்கிறார்கள் . ஆனால் இந்த கால குழந்தைகள் அந்த அளவுக்கு முட்டாள்களும் இல்லை! விவரமற்றவர்களும் இல்லை!  @srpdaa என்னும் ஐடி கொண்ட ட்விட்டர் பயனாளர் ஒருவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது திருத்தப்பட்ட ஒரு தேர்வு தாள். மூன்றாம் வகுப்பை சேர்ந்த மாணவருடையது போல தெரிகிறது.  அதில் திருமணம் என்றால் என்ன ? என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த மாணவர் “ஒரு பெண்ணின் பெற்றோர் அவளிடம், 'நீ இப்போது பெரிய பெண்... எங்களால் உனக்கு சாப்பாடு போட முடியாது, உனக்கு சாப்பாடு போட ஒரு பையனை போய்த் தேடுவது நல்லது என்பார்கள். அப்படியான பெண் அதே போல பெற்றோர்களால் திட்டி அனுப்பப்பட்ட ஆணை சந்திக்கிறாள். பின்னர் இருவரும் சந்தித்து  வாழ தொடங்கும் பொழுது திருமணம் நடக்கும். மேலும் அந்தத் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதற்காக முட்டாள்தனமான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள்” என முடித்துள்ளார். இதனை படித்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது!


 






இதனை படித்து , மதிப்பெண் வழங்கிய ஆசிரியர் ‘பூஜ்ஜியம்’  மதிப்பெண்களை வழங்கி , முட்டாளே, என்னை வந்து பார் என எழுதியிருக்கிறார். உண்மையில் அந்த மாணவனை நாம் முட்டாளே என கூற முடியுமா?  இந்த ட்வீட் அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது, இது இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட லைக்ஸைப் பெற்றுள்ளது. இந்த குழந்தையின் எழுத்தைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத நெட்டிசன்கள் அந்த பதிலை வெகுவாக பாராட்டி வருகின்றனர் .