உத்தரப் பிரதேசம் நொய்டாவில் செக்டார் 3 பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 


 






இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ரவிசங்கர் சாபி பேசுகையில், "பிளாஸ்டிக் தட்டு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நிறுவனம் அருகே இருந்த கட்டிடம் காலி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.


 






ANI செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள வீடியோவில், கட்டிடத்தில் இருந்து பெரும் புகை வெளியேறுவதைக் காணலாம். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை. கட்டித்தில் எவரேனும் சிக்கி உள்ளார்களா? எவரேனும் காயமடைந்தவர்களா என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.


 






சில ட்விட்டர் பயனர்கள் தீ விபத்து நடந்த கட்டித்தின் படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரியில் கடைவீதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த கட்டடத்தில் இருந்து பெரும் புகை மூட்டம் வெளியேறியது வீடியோவில் பதிவாகி இருந்தது.


சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் பின்புறம் உள்ள டி.என். நகரிலிருந்து தீ பரவியுள்ளது.