நாடு நாளை சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிவரும் சூழலில் பீட்டிங் ரிட்ரீட் செரிமனி என்ற நிகழ்ச்சியைக் காண இந்தியா பாகிஸ்தானின் வாகா எல்லையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


வாகா எல்லை:


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகருக்கும் இடையே அமைந்துள்ளது வாகா கிராமம்.


இது இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது வாகா எல்லை பிரிக்கப்பட்டது. கிழக்கு வாகா இந்தியாவுக்கும், மேற்கு வாகா பாகிஸ்தானுக்கும் என ஒப்பந்தம் செய்து பிரிக்கப்பட்டது. ராட்கிளிஃப் கோடு இந்த கிராமம் வழியாகச் செல்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையில் பொது எல்லை பிரிப்பில் இங்கிலாந்து வழக்கறிஞர் சிரில் ரேட்கிளிஃப் முக்கிய பங்காற்றினார். அவர் நினைவாகவே இந்த ராட்கிளிஃப் கோடு வகுக்கப்பட்டுள்ளது.
வாகா எல்லையில் தினம்தோறும் இருநாட்டு வீரர்களும் சூரிய அஸ்தமனத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக அணிவகுப்பை தொடங்கி நடத்துகின்றனர். ஒருபக்கம் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும், இன்னொருபக்கம் ஜெய்ஹிந்த் என்று முழங்கும் குரல்கள் விண்ணைப் பிளக்கும். 


இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி இன்று நடைபெற்ற Beating Retreat பீட்டிங் ரிட்ரீட் நிகழ்வைக் காண ஏராளமானோர் குவிந்தனர்.






இந்தியாவின் சிறப்பு :


இந்தியாவின் அமைவிடமானது, நில நடு கோட்டிற்கு அருகாமையில் வட அரைக்கோளத்தில் கீழ் பகுதியில் உள்ளது. இதனால், இப்பகுதி வெப்பமாகவும், மழை பெறும் பகுதியாக உள்ளது. இதனால் இந்திய நிலப்பகுதி விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை உள்ளது. எனவே தான், ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள், வணிகம் செய்வதாக இந்தியாவிற்கு வந்தனர்.


சிலர் கூறுவர், வெளிநாடு எவ்வளவு சிறப்பாக இருக்கும் தெரியுமா என்று, ஆனால் இந்தியாவை போன்று வாழ்வதற்கு ஏற்ற நிறைந்த நிலப்பகுதி உள்ள நாடுகள் சில மட்டுமே உள்ளன. ஏனென்றால் சீனா வட அரைக்கோளத்தில் இருப்பதால், அதன் பாதி நிலப்பகுதி பனி படர்ந்த பகுதி, ரஷ்யாவுக்கும் அதே சூழல்தான். அமெரிக்காவில் பெரும்பாலும் குளிர்காலம் தான் நிலவுகிறது. இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஆகையால், புவியியல் அடிப்படையில் சிறந்த அமைவிடத்தில் உள்ள இந்திய பொன்ற நிலப்பரப்பில் வாழ கிடைத்திருப்பது, நமக்கு அதிர்ஷ்டமே