கடந்த 2020ஆம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு  உத்தரவை பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது.


இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, கூடுதல் காலக்கெடு நீட்டிப்பு மேலும் வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது. இதையெடுத்து, பான் - ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் - 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்காவிட்டால்,ஜூலை, 1 ஆம் தேதி முதல் பான் செயலற்றதாகிவிடும்.


இணைக்காவிட்டால் என்ன ஆகும்? 


மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கிய காலக்கெடுவுக்குள் ஆதார், பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாக்கப்படும். மேலும் அந்த நபர் எந்த ஒரு அரசு சார்ந்த, வங்கிகளில் பான் கார்டை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அதனால் வரும் சட்ட நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும் அவசியம்.


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் அவசியம்:


வருமானவரித்துறையின் தரவுகளின்படி பல போலியான பான் கார்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை கண்டறிய வருமானவரித்துறை பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க திட்டமிட்டது. அதன்படி பான்கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கபடவில்லை என்றால் அந்த பான் கார்டு செல்லாமல் போகும் என்ற முடிவை வருமான வரித்துறை எடுத்துள்ளது.


ஒரு குறிப்பிட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எனவே இந்த முறை மூலம் அதையும் வருமான வரித்துறை கண்காணிக்க திட்டமிட்டது. ஆகவே பான் கார்டு உடன் ஆதாரை இணை வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. 


ALSO READ | PAN Aadhaar Link: அபராதத்துடன் பான்-ஆதார் இணைக்க இதுவே கடைசி வாய்ப்பு… இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?


எப்படி இணைக்க வேண்டும்?



  • ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்

  • அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

  • இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.

  • ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.

  • விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்

  • இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.


பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என பரிசோதிப்பது எப்படி?


www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும் இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்பு குறித்த செய்தி வரும்.