Continues below advertisement

பான் கார்டுகளின் பயன்கள்

பான் கார்டு இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும். வரி செலுத்துதல் மட்டுமல்லாமல், பல நிதி மற்றும் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது. அந்த வகையில் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சார இணைப்பு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது பான் கார்டு முக்கிய தேவையாக இருக்கும். மேலும் பிறந்த தேதி ஆதாரமாகவும் பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் வரி செலுத்திய பின் அதனை திருப்பித் பெறவும் பான் கார்டு அவசியமாக உள்ளது.

பான் எண் இணைக்க ரூ.1000 கட்டணம்

மேலும் வங்கி கணக்கு தொடங்குதல், 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தல்,5 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்து வாங்க அல்லது விற்க பான் கார்டு கட்டாயமாக உள்ளது. இவ்வளவு பயன்களை கொடுக்கும் பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லையென்றால் பான் கார்டுகள் ரத்து செய்யப்படும். எனவே இன்றே பான் கார்டை ஆதாருடன் இணைக்க கடைசி நாளாகும். எனவே இன்றைய தினத்திற்குள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் கார்டு செல்லாது என அறிவிக்கப்படும்

Continues below advertisement

ஆதாருடன் பான் கார்டு இணைத்துவிட்டீர்களா.?

எனவே பான் கார்டுடன் ஆதார் கார்டை ஈசியாக இணைக்கலாம். இதற்கான வழிகாட்டு முறையை தற்போது ஸ்டெப் பை ஸ்டெப் பார்க்கலாம். முதலில் உங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கமான https://www.incometax.gov.in/iec/foportal/ உள் நுழைய வேண்டும். அடுத்ததாக அங்குள்ள முகப்பு (HOME) பக்கத்தில் Quick Links கீழே பலவித OPTION இருக்கும். அதில் கடைசியில் இருந்து 4 வது மற்றும் 3வது தான் ஆதார் பான் கார்டை இணைப்பது, கார்டு இணைத்ததை சரிபார்ப்பது இருக்கும். இதில், ஆதார் கார்டுடன் பான் கார்டுகள் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை ஈசியாக பார்க்கலாம். அந்த வகையில், (Link Aadhaar Status) என்ற OPTION கிளிக் செய்து உள் நுழைய வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்களை பதிவு செய்ய வேண்டும். அடுத்தாக View AADHAR link Status என்பதை கிளிக் செய்தால் இணைத்திருந்தால் இணைக்கப்பட்டுள்ளது என காட்டும். இணைக்கவில்லையென்றால் இணைக்கவில்லையென தகவல் வரும்.

ஆதார் எண் பான் எண் இணைப்பது எப்படி.?

எனவே இணைக்கவில்லையென வந்தால் உடனடியாக முகப்பு பக்கத்தில் Quick Links கீழே உள்ள Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளின் எண்களை கொடுக்க வேண்டும். அடுத்தாக கேட்கும் ஓடிபி பதிவு செய்தால் ஆதார் மற்றும் பான் எண் இணைக்கப்பட்டு விடும். எனவே இன்றே ஆதார் மற்றும் பான் எண் இணைக்க கடைசி நாள் என்பதால் மறக்காமல் இணைத்து விடவும்.  1000 ரூபாய் அபராதம் செலுத்தி இன்றைக்குள் இணைக்கவில்லையென்றால் பான் எண் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் பான் கார்டு இணைக்கப்பட்டுவிட்டதா தெரிந்து கொள்ள

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status

ஆதார் பான் எண் இணைக்க

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar