Indian Israel Army: இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிடையே போர் வெடித்தால், யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் போர் பதற்றம்:
ஆசிய கண்டத்தில் இருக்கும் இஸ்ரேல் ஒரே நேரத்தில், ஹமாஸ், ஹிஸ்புல்லா, லெபனான் மற்றும் ஈரான் நாடுகளுடன் மோதி வருகிறது. இஸ்ரேலிற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவுக்கரம் நீட்ட, எதிர்தரப்பினருக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆதராவாக உள்ளன. அண்மையில் ஈரானில் இருந்து சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இருப்பினும், இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலின் அயர்ன் டோம் மூலம் வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இப்போது இந்த நாடுகளுக்கிடையே நிலைமை மோசமடைந்து வருவதால், எதிர்காலத்தில் இது பலநாடுகள் பங்கேற்கும் போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் ஆசிய கண்டத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. ஆனாலும், இஸ்ரேலும் இந்தியாவும் மிகவும் நல்ல நண்பர்கள், அவர்களுக்குள் போர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் எதிர்காலத்தில் இஸ்ரேலும் இந்தியாவும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன நடக்கும்? யார் கை ஓங்கும் என்பதை இங்கே அறியலாம்.
இஸ்ரேலின் ராணுவ பலம்
சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் மற்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கையின்படி, இஸ்ரேலில் 340 போர் விமானங்கள் தாக்குதலுக்கு தயாராக உள்ளன. இந்த விமானங்களில் நீண்ட தூர F-15 மற்றும் ரகசியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட F-35 போர் விமானங்களும் அடங்கும். இது தவிர எதிரி நாடுகளின் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்கும் அயர்ன் டோம் இஸ்ரேலிடம் உள்ளது. கடற்படை பற்றி பேசுகையில், இஸ்ரேலிடம் 60 கப்பல்கள் உள்ளன.
குளோபல் ஃபையர் பவர் இன்டெக்ஸின் அறிக்கையின்படி, இஸ்ரேலின் ராணுவம் உலகின் 20 வது மிக சக்திவாய்ந்த ராணுவமாகும். அதில் தற்போது 1,69,500 வீரர்கள் உள்ளனர், 4,65,000 பேர் இருப்புப் பிரிவுகளில் உள்ளனர். இது தவிர, இஸ்ரேலிடம் 12,00க்கும் மேற்பட்ட பீரங்கிகள், பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் குண்டுகள் உள்ளன. இந்த ஆயுதங்கள் அவற்றின் துல்லியமான நோக்கத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இஸ்ரேலிடமும் குறைந்தது ஒரு டஜன் அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்தியாவின் ராணுவ பலம்
குளோபல் ஃபயர் பவர் இன்டெக்ஸ் 2024 அறிக்கையின்படி, இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடி. இந்தியாவின் ராணுவ பலத்தை பற்றி பேசினால், இந்தியாவில் உள்ள மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 51.37 லட்சம். அதில் 14.55 லட்சம் பேர் நேரடி ராணுவ வீரர்களாகவும், துணை ராணுவத்தில் 25.27 லட்சம் வீரர்களும், இருப்பில் 11.55 லட்சம் வீரர்களும் உள்ளனர். இந்தியாவின் போர் விமானங்களைப் பற்றி பேசினால், அவற்றின் எண்ணிக்கை 606. இந்த விமானங்கள் எந்த சூழ்நிலையிலும் புறப்பட தயாராக இருக்கும். இது தவிர, இந்தியாவிடம் 6 டேங்கர் கப்பல்கள் மற்றும் 869 ஹெலிகாப்டர்கள் உள்ளன. அவற்றில் 40 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன. டேங்கர்களைப் பற்றி பேசினால், இந்தியாவில் 4614 டேங்கர்கள் உள்ளன.
இந்தியாவிடம் 140 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகளும், 3243 இழுத்துச் செல்லப்படும் பீரங்கிகளும், 702 MLRS ராக்கெட் பீரங்கிகளும் உள்ளன. இந்திய கடற்படைக்கு இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. இது தவிர, 12 நாசகார கப்பல்கள், 12 போர் கப்பல்கள், 18 கொர்வெட்டுகள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 137 பெட்ரோல் கப்பல்கள் உள்ளன. அணு ஆயுதங்களைப் பற்றி பேசுகையில், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இந்தியாவில் 172 அணு ஆயுதங்கள் உள்ளன.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை ஒப்பிடுகையில், இஸ்ரேலை காட்டிலும் இந்தியா பலமடங்கு வலிமை வாய்ந்ததாக உள்ளது என்பது உறுதியாகிறது.