PM Modi: கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு எவ்வளவு செலவு ஆனது தெரியுமா?-மத்திய அரசு பதில்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடு சென்று நாடு திரும்பியதற்கு ஆன செலவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடு சென்று நாடு திரும்பியதற்கு ஆன செலவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்திற்கு செப்டம்பர் 26 முதல் 28 வரை செலவிட்ட தொகை ரூ. 23,86,536 ஆகும்.

ஜி20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியின் சமீபத்திய இந்தோனேஷியா பயணத்திற்காக மத்திய அரசு மொத்தம் ரூ.32,09,760 ரூபாய் செலவி

ட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்தபோது மொத்தம் ஆன செலவு ரூ.2,15,61,304 ஆகும். அதே சமயம் 2019-ம் ஆண்டில் செப்டம்பர் 21 முதல் 28 ஆம் தேதி வரை, பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்காக ரூ.23,27,09,000 செலவிடப்பட்டது.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், இந்தியா தனது தேசிய நலனுக்கு சேவை செய்வதற்கும், வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை செயல்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழிமுறையாகும்.

இந்தப் பயணங்களின் போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்கவும், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றம், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கவும் இந்தியாவுக்கு உதவியது.

மார்ச் 2021 இல் பிரதமர் மோடியின் வங்காளதேச பயணங்கள், 2021 அமெரிக்க பயணம் மற்றும் 2021 இல் இத்தாலி மற்றும் இங்கிலாந்துக்கு பிரதமர் மேற்கொண்ட பயணங்களுக்கான செலவுகள் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் படி  பெறப்பட்டது என்று முரளீதரன் தெரிவித்தார்.

 

Continues below advertisement