குஜராத்தில் சிறுநீரக கற்களை நீக்குவதற்கு பதிலாக சிறுநீரகத்தை தவறுதலாக மருத்துவர் நீக்கிய நிலையில் நோயாளி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதத்தில் அகமதாபாத் அருகே  வங்க்ரோலி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர பாய் என்பவர் தீவிர முதுகு வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக கே.எம்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் ஷிவு பாய் படேல் என்பவர் சிகிச்சையளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு இடது பக்க சிறுநீரகத்தில் 14மிமீ கல் இருப்பது கண்டறிப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்க்ப்பட்டது. ஆனால் நோயாளி அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். 


இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு செப்டர் 3ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுநீரகக் கற்களுக்கு பதிலாக சிறுநீரகத்தை நீக்க வேண்டி இருந்ததாக மருத்துவர்கள் நோயாளியின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பமே அதிர்ச்சியடைந்தது. 




இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானது. அப்போது அகமதாபாத்தில் உள்ள ஐகேடிஆர்சிக்கு தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.  இந்நிலையில் நான்கு மாதங்கள் கழித்து ஜனவரி 8, 2012 அன்று, அவர் சிறுநீரக பிரச்சனையால் உயிரிழந்தார். இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. அது குறித்து விசாரணையும் நடைபெற்றது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான காப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது தெரிய வந்தது. ஆனால் மருத்துவரின் கவனக்குறையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துவிட்டது.


இதையும் படிக்க:


`திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பாஜக ஆதரவு!’ - சீமான் சர்ச்சை குறித்து இயக்குநர் அமீர் கருத்து! 


இதையடுத்து நோயாளியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.11.23 லட்சத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மருத்துவருக்கு சரியான தகவல்களை வழங்காததுதான் நோயாளி உயிரிழக்க காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  மேலும் 2012ம் ஆண்டு முதல் இழப்பீட்டு தொகைக்கான 7.5% வட்டியையும் சேர்த்து அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண