ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பர்வனோ (Parwanoo) பகுதி சிறந்த சுற்றுலா தளம். நகரத்தின் இரைச்சல் இல்லாமல் அமைதியான இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும். இங்கு ரோப் கார் பயணம் மிகவும் பிரபலமானது. டிம்பர் ட்ரெடில் (Timber Trail) ரெஸ்ட்ராரண்டின் ரோப் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியே நின்றிருக்கிறது. சிக்கியிருக்கும் பயணிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 10 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட் குழுவும், பாதுகாப்பு படையினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ரோப் கார் சிறுது நேரத்திற்கு முன்னும் பின்னும் நகர்ந்துள்ளது. இது குறித்த காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. 


இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி  வரீந்தர் ஷர்மா (Varinder Sharma ) கூறுகையில், ரோப் காரில் சிக்கியிருக்கும் பயணிகள் அனைவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை பாதுகாப்புடன் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.






இந்நிகழ்வினை போன்றே 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி ரோப் கார் ஒன்றின் கேபிள் அறுந்ததும் 11 பயணிகளை கொண்ட ரோப் கார் திடீரென பின்னோக்கி நகர்ந்தது. இதை கண்டு அதியர்ச்சியடைந்த ரோப் காரை இயக்கும் நபர், காரில் இருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாறைகளில் தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 152 ஹெலிகாப்டர் படை குழுவினர் மூலம் இந்த விபத்தில் மாட்டிக்கொண்ட பயணிகளை கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.


இந்தாண்டு ஏப்ரம் மாதம் இதோ போன்று ஜார்க்காண்டில் ரோப் காரில் நடுவானில் நின்றதில்  சிக்கியவர்களை 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டப்பட்டனர். 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண