Video : 'அது மேகமா.. அச்சோ அருவி” : உலகிலேயே அதிக ஈரப்பதம் கொண்ட இடம்.. மேகாலயாவின் அற்புதம்.. வைரலாகும் வீடியோ..

அப்போது அவர் வெள்ளை நிறத்தில் தெரியும் ஒரு இடத்தை பார்த்து அது மேகம்தானே என்கிறார். ஆனால் அது அருவி என்பதை சற்று நேரத்தில் அவரது குடும்பத்தினர் உணர்ந்துகொள்கின்றனர்.

Continues below advertisement

உலகின் ஈரப்பதம் கொண்ட இடம்  அதாவது அங்கு எந்த நேரமும் மழையும் குளிருமாக செழிப்பாக இருக்கும். அப்படியான இடம்  மேகாலயாவில் உள்ள  மவ்சின்ராம் பகுதிதான்.இதுதான் தற்போது உலகின் ஈரப்பதம் கொண்ட பகுதி என அறியப்படுகிறது.  

Continues below advertisement

மவ்சின்ராம்:

மவ்சின்ராம் பகுதியில் தற்போது வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சுற்றுலாபயணிகள் கோடைக்காலங்களில் அந்த பகுதிக்கு படை எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, தனது ட்விட்ட பக்கத்தில்  மவ்சின்ராம் சாலை பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை பகிர்ந்து தனது சிறுவயதில் நடந்த நிகழ்வு ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். 

ஆனந்த் மகேந்திராவுக்கே தெரியாதாம் !

நம்மில் பலர் உலகில் அதிகம் மழை பெய்யும் இடம் எது என்ற கேள்விக்கு பதிலளித்திருப்போம். சிலரின் பதில் நிச்சயமாக ‘சிரபுஞ்சி என்பதாகத்தான் இருந்திருக்கிருக்கும். இப்படித்தான் ஆனந்த் மகேந்திராவும் பதிலளித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் எழுதிய அவர் “ நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது உலகின் அதிக ஈரப்பதம் கொண்ட இடம் எது என்ற கேள்விக்கு சிரபுஞ்சி என்பதுதான் பதில் என நினைத்திருந்தேன். ஆனால் உச்சியில் மவ்சின்ராம் இருப்பது எனக்கு  தெரியாது. இந்த காட்சிகள் அற்புதமானவை “ என தெரிவித்து வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். சிரபுஞ்க்கும் மவ்சின்ராமிற்கும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் இருக்கும்  என பயணிகள் தெரிவிக்கின்றனர்.


வீடியோவில் ..

வீடியோவில் காரில் பயணித்தப்படி வீடியோவை எடுத்துக்கொண்டே செல்லும் பெண் ஒருவர் மழை மற்றும் மலைகளில் அழகினை ரசித்தபடி வீடியோ எடுக்கிறார். அப்போது அவர் வெள்ளை நிறத்தில் தெரியும் ஒரு இடத்தை பார்த்து அது மேகம்தானே என்கிறார். ஆனால் அது அருவி என்பதை சற்று நேரத்தில் அவரது குடும்பத்தினர் உணர்ந்துகொள்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola