டெல்லியில் நேற்று ஹோலி கொண்டாட்டங்களுக்கு இடையே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது.


அங்கு நேற்று அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட்டாக (40.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகி இருந்தது. இது  இயல்பை விட அதிகமாகும். டெல்லியில் இதற்கு முன், 1945ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அதன்பிறகு, 76 ஆண்டுகளுக்கு பின், மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.