ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட வீடியோவில் யானை ஒன்று தான் சென்றுக் கொண்டிருக்கும் பாதையில் தடுப்புக் கம்பி ஒன்றை சந்திக்கிறது. ஆனால் யானை அதைக்கண்டு பின்வாங்கவில்லை. யானை மெதுவாக தனது இரு முன்னங்கால்களை அந்தக் கம்பியின் மேல் போட்டு, மெல்ல மெல்ல தனது உடலை நகர்த்தி நகர்த்தி கம்பியின் மறுபக்கம் செல்கிறது. இந்த வீடியோவை 1,70,000 த்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் லைக் செய்துள்ளனர்.
இது மட்டுமன்றி ஆனந்த் மகேந்திரா இந்த வீடியோவை இந்திய பொருளாதாரத்தோடு ஒப்பிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ,” பொதுவாக இந்தியப் பொருளாதாராம் யானையோட ஒப்பிடப்படுகிறது. சமீபகாலமாக அது புலியோடு ஒப்பிடப்படுகிறது. ஆனால், அது யானையாக இருந்தாலும், அதை தோற்றவர்களின் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. ஒரு வழியை நாம் கண்டறிந்தால் அதில் எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் கடந்து செல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Watch Video | ரேஷ்மா - மதனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. அசந்துபோன புதுஜோடி..வைரலாகும் வீடியோ#Silambarasan #WatchVideohttps://t.co/z7Y0KF0agL
— ABP Nadu (@abpnadu) November 24, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்