இந்திய குடிமகனின் அடையாள ஆவணம்
ஆதார் அட்டை தற்போதைய காலத்தில் முக்கிய அடையாள அட்டைகளில் ஒன்றாக உள்ளது. 12 இலக்க ஆதார் எண் ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமானது. ஆதார் ஒரு இந்திய குடிமகனின் அடையாள ஆவணம் மட்டுமல்ல, அரசாங்கத் திட்டங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு, மொபைல் சிம் சரிபார்ப்பு, வங்கிச் சேவைகள், மற்றும் வரி விஷயங்கள் போன்ற பல துறைகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆதார் மூலமாக அரசின்திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு நேரடியாக பயனளிப்பதிலும் UIDAI முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் UIDAI அறிவித்துள்ள இந்த இலவச ஆன்லைன் முகவரி புதுப்பிப்பு வசதி, ஆதார் அட்டை பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. .இந்த வாய்ப்பானது அடுத்த ஆண்டு ஜூலை 14 வரை செயல்பாட்டில் இருக்கும். எனவே இந்திய மக்கள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏராளமான மக்கள் தாங்கள் வசித்து வரும் இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் பழைய முகவரியிலேயே ஆதார் அட்டையை தற்போதும் வைத்துள்ளனர். எனவே அவர்களுக்காக வீட்டில் இருந்து ஈசியாக ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது.
இலவசமாக ஆதார் முகவரி புதுப்பிப்பு வசதி
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிப்பதை எளிதாக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் முகவரியை ஆன்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது?
UIDAI-யின் கூற்றுப்படி, ஆதார் முகவரியை மாற்றுவது மிகவும் எளிதானது. மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே இந்த செயல்முறையை முடிக்கலாம். படிப்படியான நடைமுறை..
- UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
- ஆவண புதுப்பிப்பு விருப்பத்தை சொடுக்கவும்
- ஆதார் எண்ணை பதிவிட்டு 'சமர்பிப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்
- அடுத்தாக பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவு செய்யவும்
- முகவரி புதுப்பிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆவணம் மூலமாகவோ அல்லது குடும்பத் தலைவரின் ஆதார் மூலமாகவோ புதுப்பிக்க விரும்புகிறீர்களா என்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவும்
- முறையான விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
- கடைசியாக நீங்கள் ஒப்புகை ரசீதை (URN - 14 இலக்க எண்) பதிவிறக்கம் செய்யவும்
- இந்த URN மூலம் UIDAI வலைத்தளத்தில் உங்கள் கோரிக்கையின் தற்போதைய நிலையை சரிபார்த்துக்கொள்ளலாம். முகவரி சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க UIDAI க்கு 30 நாட்கள் வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது பயோமெட்ரிக் விவரங்களை (கைரேகைகள், கண் ஸ்கேன், புகைப்படம்) மாற்ற, ஆதார் சேவா கேந்திராவைப் மையத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படவில்லை.
பிற ஆதார் புதுப்பிப்புகளுக்கான கட்டணம்
UIDAI-யின் சமீபத்திய அறிவிப்பின்படி, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் அல்லது பயோமெட்ரிக் விவரங்களை மாற்றம் செய்ய ரூ.75 முதல் ரூ.125 வரை சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.