தமிழ்நாடு



  • தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு

  • காவல்துறையில் உள்ள 3,552 காலியிடங்களை நிரப்ப 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. 

  • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதிவரை சிறப்பு முகாம், அதுவரை சிரமமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.

  • கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவண்ணாமலை தீபத்திருவிழா. கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

  • மாற்றுத் திறனாளிகளுக்கான மெரினா கடற்கரையில் நிரந்தரப் பாதை; முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 

  • கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவரை இழுத்துச் சென்ற முதலை; நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு.

  • பண்பாட்டில் உச்சத்தையும் இலக்கியத்தில் முதிர்ச்சியையும் பெற்றது தமிழ்ச் சமூகம்; பொருநை இலக்கிய விழாவை காணொளி வாயிலாக துவக்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு. 

  • கால்நடை மருந்து தட்டுப்பாட்டிற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்; எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி வலியுறுத்தல்

  • தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் சுப்ரமணியம் விளக்கம்.


இந்தியா



  • புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நேனோ செயற்கைக் கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பிஎஸ்எல்வி சி54 ராக்கெட். அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவிப்பு.

  • இளைஞர்கள் அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்; அரசியல் சாசனதினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு. 

  •  குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம்; சட்டபேரவை தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி.


உலகம்



  • சீனாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

  • இத்தாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி; காணமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரம்.


  •  அமெரிக்காவில் மிகவும் வயது முதிர்ந்த இந்திய யானை கருணைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சோகம்




விளையாட்டு



  • உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியா, போலாந்து அணிகள் வெற்றி.

  • உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் நள்ளிரவு நடந்த அர்ஜெண்டினா மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றுள்ளது. 

  • உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் கால் இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி. 

  • இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.