தமிழ்நாடு:
சென்னைக்கு 160 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்றைக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
புதுச்சேரியில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்துள்ளது.
ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பந்தமாக மங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன்.
2023 - 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணி. முதல் கட்ட ஆலோசனையைத் தொடங்கினார் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தமிழறிஞர் ஔவை நடராஜன் உடல் நலக் குறைவால் காலமானார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.
தஞ்சையில் இரு தனியார் பேருந்துகளை மோதவிட்டு ஓட்டுநர்கள் சண்டை. பேருந்துகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை.
அலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு பேசியதால் மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் உயிரழப்பு.
ரூ. 2,178 கோடியில் தரம் உயர்த்தப்படும் 2,000 கி.மீ சாலைகள்.. தமிழக அரசு அதிரடி அரசாணை
இந்தியா
குஜராத்தில் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை. பொதுமக்களை கவர அனைத்து கட்சியின் தலைவர்களும் முனைப்பு.
எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்...பதிலடி கொடுத்த விரட்டிய இந்திய ராணுவம்.
உலகம்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழப்பு. 700க்கும் மேற்பட்டோர் காயம்.
ட்விட்டர் நிறுவனத்தின் பிரான்ஸ் தலைவர் டேமியன் வியல் பதவி விலகல்
ட்விட்டருக்கு மீண்டும் வர மறுத்த டொனால்டு டிரம்ப் எலன் மஸ்க்கை புகழ்ந்துள்ளார்.
சீனாவில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் பலி
விளையாட்டு
ஃபிபா உலகக் கோப்பைத் திருவிழாவில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் வெற்றி.
நள்ளிரவில் நடந்த அமெரிக்கா - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
ப்ரோ கபடியில் தமிழ் தலைவாஸ் வெற்றி. பெங்கால் வாரியரஸ் அணியை வீழ்த்தி அபாரம்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிகெட் போட்டி இன்று நடக்கிறது.
மூன்றாவது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விலகியுள்ளார்.