தமிழ்நாடு:
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
- மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
- 100 நாட்களில் 30,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
- ஆளுநருக்கு ஈகோ இருக்கக்கூடாது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
- அதிமுகவில் போட்டி பொதுக்குழுவை கூட்ட தயாராகிறாரா ஓபிஎஸ்? தேனி பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை அடுத்தடுத்து சந்திப்பதால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு பணி ஆணை வழங்கவேண்டும்; எம்.பி.அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
இந்தியா:
- மங்களூரு நகரில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார்.
- பழங்குடியினர் நலனுக்கான சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
- குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
- ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- குஜராத்: பாஜக வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்த 7 போட்டி வேட்பாளர்கள் சஸ்பெண்ட்
- 2 நாள் பயணமாக நாளை கம்போடியா செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
- ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் புதைத்த 120 வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- நாகலாந்து: மோன் மாவட்ட சிறையின் இரும்பு கதவை உடைத்து 9 சிறைவாசிகள் தப்பியோட்டம்
உலகம்:
- ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடைபெற்றது.
- அமெரிக்க 'கே' கிளப்பில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி, 18 பேர் காயம்
- சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு
- டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கின் தடை நீக்கம் - எலான் மஸ்க் அறிவிப்பு
- கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்க வேண்டாம் என, அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ் எச்சரித்துள்ளார்.
- பாலஸ்தீனத்தின் காசா ஸ்ட்ரிப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலியாகினர்.
- எலான்மஸ்க் ட்விட்டரை கைவசப்படுத்திய பிறகு ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு:
- 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து முதல் ஆட்டத்தில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது ஈகுவடார்.
- நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
- நியூசிலாந்து மண்ணில் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தீபக் ஹூடா படைத்தார்.
- ஒரு காலாண்டர் வருடத்தில் இதுவரை 62 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் அணி என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.